சர்ச்சைக்கிடையில் எம்பி அன்வர் ராஜா‌ மகன் திருமணம்: கதறி துடித்த இளம்பெண்..!

MP-Anwar-Raja-son-Marriage--Women-Protest

காரைக்குடி ஜமாத்தால் நிறுத்தப்பட்ட அதிமுக எம்.பி அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியின் திரும‌ணம் மற்றொரு ஜமாத்தால் நடத்தப்பட்டது.


Advertisement

சென்னை வடபழனியை சேர்ந்த பிரபல்லா என்ற பெண், காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 23-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “நான் சென்னையில் உள்ள தனியார் ஊடகத்தில் பங்கீட்டாளராகவும், வானொலி ஒன்றி தொகுப்பாளராகவும் உள்ளேன். எம்பி அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது சந்தித்து, அறிமுகமானேன். அவர் தான் தொடங்கவுள்ள ஊடகத்திற்கு ஒரு பங்கீட்டாளர் தேவை என எனக்கு ஆசை வார்த்தை காட்டினார். பின்னர் எனது அலவலகத்திற்கு வந்து செல்வார். இதற்கிடையே ஒரு நாள் தான் விவாகரத்து செய்துவிட்டு வாழ்வதாகவும், எனவே என்னை திருமணம் செய்துகொள்வதாகவும் கூறினார்.

அவரது பேச்சால் கவரப்பட்ட நான் அவருடன் மனைவி போல் வாழ்ந்தேன். ஒருநாள் என்னை மதம் மாற வேண்டும் எனவும், அப்போது தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்றும் கூறினார். அவரது பேச்சால் நான் மதமும் மாறினேன். பின்னர் நாங்கள் இருவரும் வடபழனில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு வீடு எடுத்து வசித்தோம். அங்கு கணவன்-மனைவியை போன்றே வாழ்ந்தோம். அங்கிருந்த அக்கம்பக்கத்தினரும் எங்களை தம்பதிகள் என்றே எண்ணினர். ஒருநாள் நாசர் அலி என்னிடம் வந்து, புதிதாக தொழில் தொடங்கப்போவதாக கூறினார். அவர் பேச்சை நம்பி நானும் என்னிடம் இருந்த பணம், நகை எல்லாம் கொடுத்தேன். ஆனால் அதைப் பெற்றுக்கொண்டு, அவர் என்னை விட்டுச் சென்றுவிட்டார்.


Advertisement

தற்போது என்னைப் போலவே ஆசை வார்த்தைக் கூறி வேறொரு பெண்ணை திருமணம் செய்யப்போகிறார். இதையறிந்து நான் அவரிடம் எனது பணம், நகையை திருப்பிக் கொடுக்குமாறும், எனது வாழ்வை சீரழித்தது தொடர்பாகவும் கேட்டேன். ஆனால் அவரது தந்தை எம்பி அன்வர்ராஜா மற்றும் அவரின் உதவியாளர் தேவா ஆகியோர் என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாதகவும் துன்புறுத்தியதோடு, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் வரும் மார்ச் 25ஆம் தேதி நடக்கவுள்ள நாசர் அலியின் திருமணத்தையும் தடுத்து, எனக்கு வாழ வழிவகை செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் காரைக்குடி ஜமாத்தால் நிறுத்தப்பட்ட அதிமுக எம்.பி அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியின் திரும‌ணம் மற்றொரு ஜமாத்தால் நடத்தப்பட்டது. காரைக்குடி காலேஜ் பள்ளி வாசலில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், பிரபல்லா  மண்டபத்தில் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திருமண‌ம் செய்துகொள்வதாக கூறி நாசர் அலி தன்னை ஏமாற்றியதாகவும் ஜமாத்தாரிடம் புகாரளித்தார். இதை தொடர்ந்து அவரது திருமணத்தை நிறுத்திவைப்பதாக ஜமாத் உறுப்பினர்கள் அறிவித்தனர். பின்னர் வேறு ஒரு ஜமாத் மூலம் திருமணம் நடைபெற்றது. தான் எவ்வளவோ போராடியும் நாசர் அலிக்கு வேறுஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற அறிந்த பிரபல்லா, கண்ணீர் விட்டு கதறி துடித்து அழுதார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement