[X] Close

காவிரி நீர் திறப்பை முறைப்படுத்த புதிய அமைப்பு?

Subscribe
Cauvery-issue-found-new-organisation-in-central-ministry

காவிரியிலிருந்து நீர் திறந்துவிடுவதை முறைப்படுத்த மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு ஆணையத்தை உருவாக்க ஒரு வரைவு அமைச்சரவை குறிப்பை மத்திய நீர் வளத்துறை உருவாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நீர் பங்கீடு அமைப்பு ஒன்றை உருவாக்குவதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என மத்திய நீர்வளத்துறை தெரிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசு உருவாக்கவுள்ள அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயர் இருக்காது என தெரிகிறது. இந்த அமைப்புக்கு சார்பற்ற ஒருவர் தலைவராக இருப்பார் என்றும், அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகவோ, தொழில்நுட்ப வல்லுநராகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. காவிரி தீர்பாயம் தெரிவித்தது போல் அவர் ஒரு தலைமைப் பொறியாளராக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த அமைப்பில் தலைவர் உட்பட 5 முழு நேர உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. நான்கு மாநில பிரதிநிதிகள் பகுதி நேர உறுப்பினர்களாக செயல்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. எனினும் இந்த அமைப்பு உச்சநீதிமன்றம் அளித்த மார்ச் 29 கெடுவுக்குள் அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close