புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர்.


Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் கடந்த 2003-ம் ஆண்டு பெரியார் சிலையுடன் கூடிய படிப்பகம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பெரியார் சிலையின் தலைப்பகுதியை மர்மநபர்கள் யாரோ சேதப்படுத்தியுள்ளனர். சிலையின் தலைப்பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இதனையடுத்து திராவிடர் கழக மண்டல செயலாளர் ராவணன் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த ஆலங்குடி போலீசார் இச்சம்வம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ், கூடுதல் விசாரனை மேற்கொண்டு வருகிறார். மேலும் உடைக்கப்பட்ட சிலையை இணைக்கும் பணியிலும் அப்பகுதி மக்கள்  ஈடுபட்டு வருகின்றனர். பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து  அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல்கள்: செய்தியாளர் சுப.முத்துப்பழம்பதி

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement