விழுப்புரம் சிறுவன் படுகொலை: கிராம மக்கள் உண்ணாவிரதம்

Villupuram-boy-Murder--villagers-hunger-strike

சிறுவன் சமயனை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

விழுப்புரம் அருகே உள்ள வெள்ளம்புத்தூரில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஆராயி என்பவர் வீட்டில் நடைப்பெற்ற கொலைவெறித் தாக்குலால் அந்த கிராமமே அதிர்ச்சியில் உள்ளது. இந்தத் தாக்குதலில் ஆராயி மகன் சிறுவன் சமயன் உயிரிழந்தான். ஆராயி மற்றும் அவரது 14வயது மகள் சுயநினைவில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாதி அல்லது நிலத்தகராறில் இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என காவல்துறையினர் முதலில் சந்தேகித்தனர். ஆனால் விசாரணையில் இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என தெரிவிக்கப்பட்டது. மருத்துவ அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுவன் சமயனை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக இன்றும் அவர்களின் போராட்டம் தொடர்கிறது. 


Advertisement

முன்னதாக இச்சம்பவத்தில் புதியதலைமுறை கள ஆய்வு மேற்கொண்டதில், இதே போன்று இரண்டு சம்பவங்கள் கடத்தாண்டு நடந்தாக தெரிவித்தனர். தற்போது மூன்றாவதாக இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளதால் கிராம மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement