[X] Close >

பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி!

Bollywood-filmmaker-Rajkumar-Santoshi-admitted-to-hospital

பிரபல இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

இந்தியில், காயம், தாமினி, அந்தாஸ் அப்னா அப்னா, புகார், த லெஜண்ட் ஆப் பகத் சிங், காக்கி, ஹல்லா போல் உட்பட பல்வேறு படங்களை இயக்கியவர் ராஜ்குமார் சந்தோஷி. பகத் சிங் படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள இவர் மனைவி மனிலா மற்றும் மகன் ராம், மகள் தனிஷாவுடன் மும்பையில் வசித்துவருகிறார். இவருக்கு நேற்று திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராஜ்குமார் சந்தோஷி, சென்னையில் பிறந்தவர். இவரது அம்மா தமிழகத்தைச் சேர்ந்தவர். தந்தை சந்தோஷி பிரபல இந்திப் பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close