நான் பூ அல்ல விதை: ஸ்டாலினுக்கு கமல் பதிலடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நான் பூ அல்ல விதை என்று ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.


Advertisement

தமிழக அரசியல் களத்தில் காகிதப் பூக்கள் மணக்காது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டு இருந்த அறிக்கையில், “பருவநிலை மாறும்போது ஒருசில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமாக காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால் அந்தக் காகிதப் பூக்கள் மணக்காது” என்று தெரிவித்து இருந்தார். நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் புதிய கட்சிகள் தொடங்கவுள்ள நிலையில் ஸ்டாலினின் இந்தக் கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், நான் பூ அல்ல விதை; என்னை முகர்ந்து பார்க்காதீர்கள் விதைத்து பாருங்கள் வளருவேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும், நான் கூட்டணி வைப்பேன் என்று எப்போதும் சொன்னதில்லை என்றும் மு.க.ஸ்டாலின் என்னை பற்றி சொல்லியிருக்கமாட்டார் என்றும் அவர் தெரிவித்தார். காகிதப் பூக்கள் மணக்காது என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளது இருவரிடயே அரசியல் வார்த்தைப் போர் தொடங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement