JUST IN

Advertisement

காவிரி தீர்ப்பு: டாப் 20

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள்..


Advertisement

 

1.காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு


Advertisement

2. 2007-ல் நடுவர்மன்றம் 192 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டிருந்தது.

3. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும்.

4. தமிழகத்திற்கான ஒதுக்கீடு குறைப்பால் கர்நாடகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதலாக கிடைக்கும்.


Advertisement

5. தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் 10 டிஎம்சி இருப்பதை நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

6. காவிரி நீரை தனிப்பட்ட ஒரு மாநிலம் உரிமை கொண்டாட முடியாது

7.பெங்களூரு குடிநீர் பயன்பாட்டிற்கு கூடுதலாக 4.75 டிஎம்சி நீர் வழங்க உத்தரவு

8. கர்நாடகாவுக்கு காவிரி நடுவர் மன்றம் 270 டிஎம்சி அளித்த நிலையில் அது 284.75 டிஎம்சியாக உயர்வு

9. தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சியில் 4.75 டிஎம்சி நீர் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக ஒதுக்கீடு.

10. உச்சநீதிமன்ற தீர்ப்பால் காவிரியில் 284.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கிடைக்கும்.

11. கேரளா (30 டிஎம்சி) புதுச்சேரி (7 டிஎம்சி) என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை.

12. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு

13. தீர்ப்பின் மாதாந்திர அடிப்படையில் தமிழகத்திற்கு கர்நாடகா நீரைத் திறக்க வேண்டும்.

14.பெங்களூரின் குடிநீர் தேவை, தமிழக நிலத்தடி நீர் இருப்பு குறித்து நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

15. நடுவர் மன்றத் தீர்ப்பில் இருந்த சில பிழைகள் இந்த தீர்ப்பில் சரிசெய்யப்பட்டு விட்டன.

16. நடுவர் மன்றத் தீர்ப்பில் இருந்த ஓரிரு பிழைகள் சரி செய்யப்பட்டதால் அது இறுதித் தீர்ப்பாக இருக்கும்.

17. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

18.நடுவர் மன்ற உத்தரவு இறுதி செய்யப்பட்டு விட்டதால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது.

19. சென்னை மற்றும் மைசூரு மாகாணங்கள் இடையே 1892, 1924 ஆம் ஆண்டுகளின் ஒப்பந்தங்கள் செல்லும்.

20. சென்னை, மைசூரு மாகாண ஒப்பந்தங்களின்படி, காவிரியில் தமிழக அனுமதியின்றி அணை கட்ட முடியாது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement