பாண்ட்யா வந்ததும் நிலை மாறியது: புஜாரா பேட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹர்திக் பாண்ட்யா அடித்து ஆடிய பிறகுதான் இந்திய அணியின் ஓய்வறையில் பாசிட்டிவ் மூட் திரும்பியது என்று புஜாரா தெரிவித்தார்.


Advertisement

இந்தியா- தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. முதன் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 286 ரன்கள் எடுத்துள்ளது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பாண்ட்யாவின் அதிரடியால் இந்திய அணி 209 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, 26 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிளாண்டர் வீசிய பந்தை தேவையில்லாமல் அடித்து விக்கெட்டை இழந்தார். 


Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஜார, ’இந்த தொடரில் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடியிருக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக ஆடினார். வெளிநாடுகளில் அவர் அதிகம் ஆடியதில்லை என்றாலும் அவர் விளையாடிய விதம் மிரட்டலாக இருந்தது. இதுமாதிரியான ஆட்டத்தைதான் அவரிடம் எதிர்பார்த்தோம். அவர் இந்த ரன்களை எடுக்கவில்லை என்றால் கஷ்டமாகி இருக்கும். அவர் அடித்து ஆடத் தொடங்கிய பின் தான் டிரெஸ்சிங் ரூமில் பாசிட்டிவ் மூட் திரும்பியது. அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். இதே அதிரடியை அவர் தொடர்வார் என நம்புகிறேன். அதே நேரம் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது’ என்றார். 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement