டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்கு பின் இலங்கை வீரர்களில் சிலர் முகக்கவசம் அணிந்து கொண்டு களமிறங்கினர். இதனையடுத்து இலங்கை அணி வீரர்களிடம் நடுவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கை வீரர்கள் விளையாட சம்மதித்ததை அடுத்து, மீண்டும் போட்டி தொடர்ந்தது.
இந்நிலையில் போட்டிக்குப் பின் பேசிய இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ், ‘ டெல்லி காற்று மாசு பற்றி எல்லோருக்கும் தெரியும். வீரர்கள் ஆடுகளத்தில் மூச்சு விட சிரமப்பட்டனர். வழக்கமான சீதோஷ்ண நிலை இல்லாததால் வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். டிரெஸ்சிங் ரூம் திரும்பிய லக்மல், கமகே, தனஞ்செயா ஆகியோர் தொடர்ந்து வாமிட் எடுத்துக்கொண்டே இருந்தனர். பின்னர் மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இது கிரிக்கெட்டில் புதுவிதமான பிரச்னை. அதனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நடுவர்களின் முடிவுக்கே விட்டுவிட்டோம். நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாடதான் வந்துள்ளோம். அதை நிறுத்த வேண்டும் என்கிற நோக்கம் எங்களுக்கு இல்லை. அதோடு வீரர்களின் பாதுகாப்பும் முக்கியம்’ என்றார்.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?