மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி: கமல் ட்விட்

Kamal-Condolences-for-Kanyakumari-People

ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் அனுதாபங்கள் தெரிவித்துள்ளர்.


Advertisement

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ள நிலையில், புயலுக்கு ‘ஒகி’ என பெயரிடப்பட்டுள்ளது. ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் அதிக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. ஏராளமான மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்துள்ளன. எனவே பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கன்னியாகுமரி ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கன்னியாகுமரி மக்களுக்கு அனுதாபங்கள் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் புதிய ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement