[X] Close >

செவிலியர் விடிய விடிய போராட்டம்: இன்றும் தொடர்கிறது!

contract-nurses-strike-continues-in-chennai

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement

சென்னை அண்ணாசாலையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், செவிலியர் தங்கள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தை தொடர்கின்றனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என செவிலியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதால், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டார். இதனிடையே, செவிலியர் கோரிக்கை தொடர்பாக வரும் 4ம் தேதி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close