[X] Close >

விற்பனை செய்த வீட்டை காலி செய்ய மறுத்த உரிமையாளர்: குழம்பிய காவல்துறையினர்

Coimbatore-House-Sales-issue

 


Advertisement

கோவையில் விற்பனை செய்த வீட்டை காலி செய்ய மறுத்த உரிமையாளர் வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த‌யது.‌

கோவை, சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் மோகன்ராஜ் - வாணி தம்பதியினர். இவர்கள் தாங்கள் வாங்கிய கடனுக்காக கந்துவட்டிக்காரர்களான தங்கவேல் மற்றும் ஆறுச்சாமி ஆகியோர் தங்கள் ‌வீட்டை அபகரிக்க முயல்வதாக புகார் கூறினர். இதையடுத்து மோகன்ராஜை வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டிச் சென்றதாக புகார் கூ‌றப்பட, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தங்கவேல் மற்றும் ஆறுச்சாமியை அழைத்து விசாரணை நடத்தினர்.


Advertisement

அதில், மோகன்ராஜ் - வாணி தம்பதியினர் கடந்த ஆண்டு தங்கள் வீட்டை 32 லட்ச ரூபாய்க்கு கிரயம் செய்ததாகவும், ஆனால் இதுவரை வீட்டை காலி செய்ய மறுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், கந்துவட்‌டி வாங்கியதற்கோ, கொடுத்ததற்கோ ஆதாரம் கிடைக்காததால் குழம்பிய காவல்துறையினர், இரு தரப்பினரின் புகார்களை பெற்றுக்கொண்டனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close