சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சாகித் அப்ரிடி ஓய்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான சாகித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


Advertisement

36 வயதான அப்ரிடி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2010ல் ஓய்வு பெற்றுவிட்டார். இதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளிலிருந்து 2015ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகியிருந்தார். இந்நிலையில் தனது 21 வருட சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்து கொள்வதாக அவர் அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்த அப்ரிடியை ’பூம் பூம்’ என்ற புனைப்பெயரில் ரசிகர்கள் அழைப்பதுண்டு. இந்த சாதனை 18 ஆண்டுகளுக்கு நீடித்தது. பாகிஸ்தான் அணிக்காக 98 டி20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள அப்ரிடி 1,405 ரன்கள் மற்றும் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அடுத்த 2 ஆண்டுகள் விளையாடத் திட்டமிட்டுள்ளதாக அப்ரிடி தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement