[X] Close

பிரதமர் மோடி- கருணாநிதி சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது: மு.க.ஸ்டாலின்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமர் மோடி- கருணாநிதியின் சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், " கருணாநிதி- பிரதமர் மோடி சந்திப்பால், பாஜகவுக்கு ஆதரவாக திமுக செயல்படுகிறதா..? என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதுகின்றன. மேலும் டிவிக்களிலும் விவாத நிகழ்ச்சிகள் இதுகுறித்து நடைபெறுகின்றன. பத்திரிகைகளை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. வியாபார நோக்கத்தில் அவர்கள் செய்கிறார்கள். என் மூலம் வியாபாரம் நடைபெறுகின்றது என்றால் சந்தோஷம் தான். பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து நடைபெறும் திமுகவின் போராட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். உண்மையில், மழை பாதிப்பு அதிகம் உள்ள 8 மாவட்டங்களில் மட்டும் தான் மக்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்ற காரணத்திற்காக ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதுவும் தற்போது 6 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி- கருணாநிதியின் சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை. அது அரசியலுக்கு அப்பாற்பட்டது" என தெரிவித்தார்.

தினந்தந்தி நாளிதழினின் பவள விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 6-ஆம் தேதி சென்னை வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் சென்னை கோபாலபுரத்திற்கு சென்ற அவர் அங்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement