கதக் பைங்கிளி என வர்ணிக்கப்படும் சித்தாரா தேவியின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்துள்ளது கூகுள் டூடுல்.
கதக் நடனத்தில் பேர் போன சித்தாரா தேவி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 1920-ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் தனலட்சுமி. தந்தை கதக் நடனத்தில் தேர்ந்தவர். அவரைப் போலவே சித்தாரா தேவி கதக் நடனத்தில் பெயர் பெற்றவராக விளங்கினார். சுமார் 60 ஆண்டுகள் கதக் நடனத்தில் சிறந்து விளங்கிய சித்தாராவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டிய நங்கையை நினைவு கூறும் விதமாக கூகுள் நிறுவனம் தனது டூடுல் பக்கத்தில் அவரின் நாட்டியத்துடன் கூடிய புகைப்படத்தை அலங்கரித்துள்ளது. உலக புகழ் பெற்ற சித்தாராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, சங்கீத நாடக அகாடமி, பத்மிஸ்ரீ, காளிதாஸ் சம்மன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டன. தனது வாழ்வை நடனத்துக்கு அர்ப்பணித்த சித்தாரா கடந்த 2014 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் தனது 94வது வயதில் காலமானார்.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ