[X] Close >

ஸ்டாலின் குற்றச்சாட்டு உள்நோக்கமானது: அமைச்சர் காமராஜ்

dmk-stalin-statement-have-intention-said-minister-kamaraj

தமிழக அரசு மீது எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறி வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை என்றும் அமைச்சர் காமராஜ் கூறினார்.


Advertisement

திருவாரூர் பகுதிகளில் கடந்த வாரத்தில் பச்சைப்பசேலென்று செழித்துக்காணப்பட்ட பயிர்கள்‌ தற்போது தண்ணீருக்குள் மூழ்கி விவசாயிகளை கண்ணீர் விட வைத்துள்ளன. நன்னிலம், கொறடாச்சேரி, குடவாசல் உள்ளிட்ட திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான வயல்வெளிகளில் இதுபோன்ற காட்சியைத்தான் காண முடிகிறது. இனியும் மழை தொடர்ந்தால் பயிர்களை காப்பாற்றுவது கடினம் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

இதற்கிடையில் வெள்ளம் அதிகளவில் சூழ்ந்துள்ள நன்னிலம், பூந்தோட்டம், கொறடாச்சேரி பகுதிகளில் அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். சுமார் 500 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் அமைச்சர் திட்டவட்டமாக மறுத்தார். குறிப்பாக நீர் நிலைகள் அனைத்தும் தூர் வாரப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார். தமிழக அரசு மீது எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறி வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை என்றும் அமைச்சர் காமராஜ் கூறினார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close