திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அரசியலுக்காக பொய்யான தமிழ் மொழிப்பற்றை வெளிப்படுத்துகிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்துவதற்காக பாஜக சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை சென்னை சாலிகிராமத்தில் தமிழிசை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசை மட்டும் குறைகூறுவதில் குறியாக இல்லாமல், டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து கட்சியினரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எந்தக் கட்சியையும் அழிக்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்குக் கிடையாது என்றும், தங்களை பலப்படுத்துவதே இலக்கு என்றும் கூறினார்.
அரசியலில் பிழைக்க முடியாததால் ஸ்டாலின் போன்றோர் தமிழ் பற்றாளர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். இந்தி மொழியை வைத்து, மீண்டும் அரசியல் செய்யலாம் என ஸ்டாலின் நினைக்கிறார் என தமிழிசை சாடினார். ஸ்டாலினை விட பாஜகவினருக்கு தமிழ் மொழி மீது மதிப்பும், மரியாதையும் உள்ளதாகவும் எந்த மொழி வந்தாலும், தமிழை அழிக்க முடியாது எனவும் தமிழிசை தெரிவித்தார்.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி