கருக்கலைப்பு திருத்தச் சட்டம் : சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மருத்துவ ரீதியில் கருக்கலைப்பு செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. 


Advertisement

மருத்துவரீதியான கருக்கலைப்பு சட்டம் 1971-ன் படி, தாயின் வயிற்றில் 20 வாரம் வரை வளர்ந்த கருவை மட்டுமே கலைக்க அனுமதி உண்டு. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மும்பை இளம் பெண்ணின் வயிற்றில் வளரும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட 24 வார கருவைக் கலைக்க, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த அனுஷா ரவீந்திரா என்பவர் என்று பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவ ரீதியில் கருக்கலைப்பு செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்ய முடியாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளது. எனினும் தவிர்க்க முடியாத சில பிரச்னைகளில் மட்டும் 20 வாரத்திற்கு மேற்பட்ட கருக்களை கலைப்பதற்கு விதிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement