ரஜினி கேட்ட அரசியல் சந்தேகத்திற்கு பதில் சொன்ன கமல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிவாஜி கணேசன் மணிமண்டப விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் சில அரசியல் சந்தேகங்களை முன் வைத்திருந்தார். அது குறித்து தனக்கு பதில் தெரியாது என்றும் கமலுக்கு தெரிந்திருக்கும் என்றும் கூறியிருந்தார். அதற்கு தற்போது கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement

சமீபத்தில் தமிழக அரசு நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் ஒன்றை திறந்து வைத்தது. அவ்விழாவில் பேசிய ரஜினி, சிவாஜி தனியாக கட்சி ஆரம்பித்தார். தேர்தலில் பேட்டியிட்டார். ஆனால் அவர் நின்ற தொகுதியிலேயே தோற்று போனார். அவர் தேற்றது அவருக்கு அவமானம் இல்லை. அந்தத் தொகுதிக்கு அவமானம் என்று பேசிவிட்டு அரசியலில் வெற்றி பெற சினிமா புகழ் மட்டுமே போதாது. அதற்கு மேல் ஏதோ ஒன்று தேவை. அது மக்களுக்கு மட்டும்தான் தெரியும். நான் நினைக்கிறேன் ஒருவேளை கமலஹாசனுக்கு அது தெரிந்திருக்கும். ஆனால் சத்தியமாக எனக்குத் தெரியாது. அதை நான் கேட்டால் கமல் கூறமாட்டார். ஒருவேளை இரண்டு மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் கூறியிருப்பாரோ என்னவோ என்று பொடி வைத்து பேசினார்.

இந்நிலையில் இது குறித்து பத்திரிகை ஒன்று கேள்வி எழுப்பியதற்கு கமல் பதில் அளித்திருக்கிறார். "அரசியலில் உண்மையான வெற்றி என்ன? ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி அதிக இடங்களை கைப்பற்றி முதல்வராக மாறுவது. அந்த வெற்றியின் உண்மையான நோக்கம் மக்களுக்கு நல்ல ஆட்சியை வழங்குவது. அது நடக்கவில்லை என்றால் தேர்தலில் வெற்றிபெறுவது அர்த்தமற்றதாகும்" என்று கூறியிருக்கிறார்.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement