அந்தரத்தில் தொங்கும் நீட் மசோதா: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சாசன நெருக்கடியால், தமிழக அரசு கொண்டு வந்த நீட் மசோதாவின் எதிர்காலம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாகவும், எனவே இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தர ஒத்துழைப்பு தருமாறும் பிரதமர் மோடிக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் மருத்துவ முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

அறிவார்ந்த மருத்துவர்கள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம், மருத்துவ சேவைகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்ல எளிய மருத்துவர்களும் தேவை என்று ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

நீட் தேர்வானது கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புறங்களில் வாழும் ஏழை மாணவர்களுக்கும் சாதகமாக இருக்காது என கூறியுள்ள ஸ்டாலின், நீட் தேர்வு வந்தால் அவர்களின் எதிர்கால கனவு சிதைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான “நீட்” தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தன்னுடை கருத்து என தெரிவித்துள்ள ஸ்டாலின், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சாசன நெருக்கடியால் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ள சூழ்நிலையில், நீட் தேர்வுக்கு விலக்களித்து மாநில அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவின் எதிர்காலம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தர ஒத்துழைப்பு கோருவதாகவும் கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு உடனடியாக மாற்றி, கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டுமாறும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement