ஐஎஸ் அமைப்புக்கு ஆள் திரட்டியவர் சென்னை அருகே கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்களை அனுப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்த ஷாகுல் ஹமீது என்பவர் சென்னை அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

சிரியா நாட்டுக்கு ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை அனுப்புவது, நிதி திரட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஓட்டேரியில் பதுங்கியிருந்த ஷாகுல் ஹமீதை தேசிய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி செந்தூர்பாண்டியன் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் காஜா மொய்தீன் என்பவருக்கு தொடர்பு இருப்பதால் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் மனு அளிக்க உள்ளனர். இந்த மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் எனத்தெரிகிறது. காஜா மொய்தீன், அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லியில் உள்ள சிறப்பு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement