விஷால் வேட்பு மனு நிறுத்தி வைப்பு

Producers-Election-Vishal-nomination-Stopped

விஷாலின் வேட்பு மனுவுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றம் செல்ல இருப்பதால் அவரது மனுவை நிறுத்தி வைத்துள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட நடிகர் விஷால் மனு தாக்கல் செய்திருந்தார். நடிகர் விஷால் நடிகர் சங்க நிர்வாகியாக இருப்பதால் அவரது வேட்புமனுவை ஏற்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாடவுள்ளனர். இதனையடுத்து அவரது மனுவை நிறுத்தி வைத்துள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Advertisement

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ராஜேஸ்வரன் கூறுகையில், விஷாலின் வேட்பு மனுவுக்கு எதிராக சங்க நிர்வாகிகள் நீதிமன்றம் செல்ல இருப்பதால் அவரது மனுவை நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவரது வேட்புமனு மீது நீதிமன்ற உத்தரவுப்படி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 99 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 2 பேரின் மனு நிராகரித்துள்ளதாக தெரிவித்தார்.மேலும் திட்டமிட்டபடி மார்ச் 5ல் தேர்தல் நடைபெறும் என்றும், இறுதி வேட்பாளர் பட்டியல் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement