முதல்வர் பழனிசாமி திறக்கும் மார்க்கெட்டுக்கு எதிர்ப்பு: வியாபாரிகள் போராட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருச்சி‌ காந்தி சந்தை கள்ளிக்குடி பகுதிக்கு இடமாற்றம் செய்‌யப்பட்டதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தவுள்‌ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு‌ அறிவித்துள்ளது.


Advertisement

‌திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் காந்தி சந்தை அனைத்து சங்கங்களின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில், காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சந்தையை நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறக்கவிருப்பதையொட்டி, நடைபெறவிருக்கும் போராட்டங்கள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொருளாளர் கோவிந்தராஜூலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்சி காந்தி சந்தையை தற்போது உள்ள இடத்தில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள கள்ளிக்குடி பகுதிக்கு இடமாற்றம் செய்வதை கண்டித்து, காந்தி சந்தை அனைத்து வியாபாரிகள் நாளை கடையடைப்பு உண்ணாவிரதம் மற்றும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுளோம்.


Advertisement

புதிதாக கட்டப்பட்டுள்ள கள்ளிக்குடி சந்தையை, நாளை காணொளிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைக்கவுள்ளார். காய்கறி மொத்த வியாபாரம் செய்ய போதுமான இடவசதி கள்ளிக்குடி சந்தையில் இல்லாததால், காணொளிக் காட்சி மூலம் முதல்வர் சந்தையை திறக்கும்போது கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்று கூறினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement