'சந்திரபாபு நாயுடுவைச் சுட்டுக் கொல்ல வேண்டும்': ரெட்டி பேச்சால் சர்ச்சை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைப் போன்றவர்களை பொது இடத்தில் வைத்து சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


Advertisement

நந்தியால் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டபோது ஜகன்மோகன் இதைப் பேசினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகக் குற்றம்சாட்டி இதை ஜகன்மோகன் ரெட்டி தெரிவித்தார். இதையடுத்து, அவர் மீது ஆந்திர காவல் துறையிடம் தெலுங்கு தேசக் கட்சி தரப்பில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவர் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
இதற்கிடையே, ஜகன் மோகனின் பேச்சுக்கு தெலுங்கு தேசக் கட்சித் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement