ஏவுகணை சோதனையின்போது குறுக்கே பாய்ந்த விமானம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியபோது அந்த வழியாக பயணித்த ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானம் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் கடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

ஐ.நா., அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. டோக்கியோவில் இருந்து பாரிஸ்க்கு வடகொரியா வழியாக ஏர் பிரான்ஸ் விமானம் பயணித்துள்ளது. இந்த விமானத்தில் 330 பயணிகள் பயணம் செய்தனர். அப்போது வடகொரியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஹுவாசாங் 14 என்ற ஏவுகணை சோதனையை செய்துள்ளது. சுமார் 100 கிலோமீட்டர் இடைவெளியில் விமானமும், ஏவுகணையும் மோதுவதிலிருந்து தப்பித்துள்ளன. 10 நிமிட இடைவேளையில் ஏவுகணையை விமானம் கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து தனது விமானங்கள் செல்லும் பகுதியை ஏர் பிரான்ஸ் நிறுவனம் மாற்றியமைத்து அறிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement