கட்சி, ஆட்சி என அனைத்து பொறுப்புகளையும் தாமே வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு கதவு திறந்து தான் உள்ளது என்று எடப்படி பழனிசாமி அணியினர் கூறுவது வரவேற்பாகாது என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இரு அணிகள் இணைவதற்கான நிபந்தனைகள் பற்றி எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகச் சொல்லும்போதுதான் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், “கட்சி, ஆட்சி என எல்லா பதவிகளையும், பொறுப்புகளையும் தாங்களே வைத்துக்கொண்டு கதவு திறந்திருக்கிறது. வாருங்கள்! என்று சொல்வது சரியில்லை. என்னைப் பொறுத்தவரை அந்த அணுமுறை சரியாக இருக்காது. எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக பேச வேண்டும். எங்களுடைய நிபந்தனைகளை எப்படி நிறைவேற்றுவார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். அதன்பிறகு பேச்சுவார்த்தைகளும் வெளிப்படையாகவே நடக்கும்” என்று கூறினார்.
Loading More post
"ஈம சடங்கு நிகழ்ச்சிக்காவது அனுமதி கொடுங்க” - தெருக்கூத்துக் கலைஞர்கள் கோரிக்கை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?