[X] Close

RCB vs RR : டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு!

Subscribe
RCB-versus-RR-plays-at-league-match-number-16-of-the-IPL-2021-Season-and-RCB-Elected-to-Bowl-first

நடப்பு ஐபிஎல் சீசனின் 16வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் கோலி பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதனால் ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்கிறது. 


Advertisement

இந்த சீசனி முதல் மூன்று போட்டிகளில் மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளை வீழ்த்தி வெற்றி நடை போடுகிறது பெங்களூர் அணி. அந்த அணிக்கு இது நான்காவது போட்டியாகும். அதே போல மும்பை மைதானத்தில் அந்த அணிக்கு இந்த சீசனில் இது முதல் போட்டியாக அமைந்துள்ளது. 

மறுபக்கம் ராஜஸ்தான் அணி மூன்று போட்டிகளில் விளையாடி, இரண்டில் தோல்வியை தழுவி உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காணலாம். இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் அரங்கில் 20 போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் தலா பத்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 


Advertisement

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close