[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா

தலைக்கு அருகில் சார்ஜ்: செல்போன் வெடித்து உயிரிழந்த சிறுமி!

girl-14-dies-when-her-phone-explodes-on-her-pillow-after-she-went-to-sleep-with-it-plugged-into-a-charger-in-kazakhstan

செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு அருகிலேயே உறங்கிய சிறுமி செல்போன் வெடித்து உயிரிழந்தார்

கசகஸ்த்தான் நாட்டில் பாஸ்டோப் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆல்வா அசெட்கிஸி. 14 வயதான ஆல்வா அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்னர் இரவு செல்போன் பயன்படுத்திக் கொண்டே உறங்கச் சென்றுள்ளார். அப்போது செல்போனில் சார்ஜ் இல்லாததால்  சார்ஜ் போட்டவாறே செல்போனை தலைக்கு அருகில் தலையணையிலேயே வைத்துக்கொண்டு தூங்கிவிட்டார். நடு இரவில் செல்போன் பேட்டரி வெடித்து சிதறியுள்ளது. தலைக்கு அருகிலேயே செல்போன் வெடித்ததால் பலத்த காயம் அடைந்த ஆல்வா படுக்கையிலேயே உயிரிழந்தார்.

காலையில் பலத்த காயத்துடன் சிறுமி படுக்கையில் கிடப்பதை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக மருத்துவ உதவியை நாடியுள்ளனர். ஆனால் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்போன் சார்ஜ் ஆகி அதிகப்படியாக வெப்பமாகி பேட்டரி வெடித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு என போலீசார் வழக்கை முடித்துவைத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close