[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

quake-with-7-3-magnitude-strikes-in-eastern-indonesia

கிழக்கு இந்தோனேஷியாவில் இன்று பிற்பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

கிழக்கு இந்தோனேஷியாவின் மோலுக்காஸ் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்தோனேஷிய நேரப்படி மாலை 6.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. 

மேலும் இந்தச் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்த தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்தோனேஷியா நாட்டில் நிலநடுக்கம் அடிக்கடி வருவது வழக்கம் என்றாலும் இம்முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close