[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

மாலத்தீவில் இருந்து இலங்கை புறப்பட்டார் மோடி!

prime-minister-narendra-modi-leaves-for-sri-lanka-from-maldives

மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இலங்கைக்கு புறப்பட்டார். 

நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமர் பதவியேற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு சென்றார். தலைநகர் மாலேவில் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் சோலியை மோடி சந்தித்து பேசினார். இதன் பின் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றினார். பயங்கரவாத அச்சுறுத்தல் என்ற வெள்ளம் தற்போது தலைக்கு மேலே சென்று விட்டதாகவும் எனவே அதை முறியடிக்க உலக நாடுகள் ஒன்று திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

சில நாடுகளில், அரசுகளே பயங்கரவாதத்தை தூண்டி விட்டுக்கொண்டிருப்பதாகவும் பாகிஸ்தானை பிரதமர் மறைமுகமாக குற்றஞ்சாட்டினார். மேலும் மாலத்தீவுடனான உறவு வலுப்பட வேண்டும் என்றும் பிரதமர் விருப்பம் தெரிவித்தார்.

முன்னதாக, மாலத்தீவு அதிபருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அந்நிகழ்வைத் தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட பேட்டை மாலத்தீவு அதிபருக்கு மோடி பரிசாக வழங்கினார். வெளிநாட்டு தலைவர்களுக்கு மாலத்தீவு அரசு வழங்கும் உயரிய கவுரவமான நிஷான் இசுத்தீன் விருதை அதிபர் இப்ராகிம் சோலி, பிரதமர் மோடிக்கு வழங்கினார். 

மாலத்தீவு பயணத்தை தொடர்ந்து இன்று இலங்கையில் சில நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். இதற்காக, அவர் மாலத்தீவில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இன்று மதியம் கொழும்பு வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளதாக இலங்கை அதிபர் மாளிகை விடுத்து ள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close