[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

தன்னுடைய உயிரணுவை செலுத்தி 49 குழந்தைகளுக்கு தந்தையான டாக்டர்!

dutch-doctor-secretly-fathered-49-children-used-to-replace-sperm-of-donors-with-his-own

நெதர்லாந்தில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய உயிரணுவை செலுத்தி 49 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் பகுதியில் கருத்தரிப்பு மருத்துவமனை நடத்தி வந்தவர் டாக்டர். ஜான் கார்பத். அவரது மருத்துவமனைக்கு செயற்கை கருத்தரிப்புக்காக குறிப்பிட்ட உயிரணுவுடன் பெண்கள் வருவது வழக்கம். ஆனால் மருத்துவர் கார்பத், பெண்கள் கொண்டு வரும் உயிரணுக்களை பயன்படுத்தாமல் தன்னுடைய உயிரணுக்களையே பயன்படுத்தியுள்ளார். 

1980களில் இவருடைய உயிரணுக்களில் பல குழந்தைகள் பிறந்துள்ளன. பல வருடங்களுக்கு பிறகு இந்த விவகாரம் வெளியே கசிந்துள்ளது. கிட்டத்தட்ட 49 பிள்ளைகளுக்கு கார்பத் தந்தையாகியுள்ளார். வளர்ந்த குழந்தைகள் சாயலில் ஒரே மாதிரி இருந்ததால் சந்தேகம் அடைந்தவர்கள் இது  குறித்து சமீபத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனைவரது டிஎன்ஏ வையும் சோதனை செய்துள்ளது. அந்த சோதனையில் 49 பேருக்கு கார்பத்தே தந்தை என தெரியவந்துள்ளது.

பல வருடங்களுக்கு பிறகு இந்த உண்மை வெளியே தெரிந்தாலும், மருத்துவர் ஜான் கார்பத் 2017ம் ஆண்டே வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close