[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

ஹிட்லர் வரைந்ததாக கூறப்பட்ட ஓவியங்கள் போலியானவையா ? 

fake-hitler-paintings-seized-by-german-police-in-berlin

ஜெர்மனில் ஹிட்லர் தீட்டியவை என ஏலம் விட முயன்ற 3 ஓவியங்கள் போலியானவை என தெரியவந்துள்ளது.

ஹிட்லர் என்றால் சர்வாதிகாரி என்றே அனைவருக்கும் நினைவு வரும். ஆனால் ஹிட்லர் மிகச்சிறந்த ஓவியரும் கூட. ஹிட்லர் ஆரம்பகாலங்களில் ஓவியராக ஆகவேண்டுமென்றே ஆசைப்பட்டதாகவும் பின்னர் காலமாற்றத்தில் அது நிறைவேறாமல் போனதாகவும் வரலாறு கூறுகிறது. ஆனாலும் தன்னுடைய இளைமைக்காலத்திலும், ஓய்வு நேரங்களிலும் ஓவியம் வரைவதை ஹிட்லர் வாடிக்கையாக கொண்டுள்ளார். தன்னுடைய வாழ்நாளில் மொத்தம் 2ஆயிரத்துக்கும் அதிகமான ஓவியங்களை வரைந்திருப்பார் என்றும் கூறப்படுகிறது. 

அவ்வப்போது ஹிட்லரின் ஓவியங்கள் ஏலம் விடப்பட்டும் வருகின்றன. ஹிட்லரின் கையெழுத்துடன் கூடிய அவரின் ஓவியங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.

இந்நிலையில் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள பழங்கால ஓவியங்களை ஏலம் விடும் கூடத்தில் ஓவிய ஏலம் நடைபெற்றது. இதில் ஹிட்லர் வரைந்ததாக கூறப்பட்ட 3 ஓவியங்களும் இடம்பெற்று இருந்தன. ஆறு, மலை, மரம் என இயற்கை காட்சிகளான அந்த ஓவியத்தில் ஹிட்லரின் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. இந்த ஓவியங்கள் ஹிட்லர் வரைந்தவை என அந்நாட்டு கையெழுத்து தடயவியல் நிபுணர்கள் சான்று அளித்திருந்தனர். 

இந்நிலையில் அந்த ஓவியங்கள் போலியானவை என்றும், அந்த ஓவியத்துக்கும் ஹிட்லருக்கும் தொடர்பில்லை என்றும் கூறி 3 ஓவியங்களையும்  பெர்லின் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பெர்லின் போலிசார், இந்த 3 ஓவியங்களும் போலியானவை. ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம். இந்த ஓவியங்கள் அத்தனை சிறப்புமிக்கவையாக இல்லை. ஹிட்லரின் கையெழுத்தை வைத்தே அது ஏலத்துக்கு வந்துள்ளது. போலியான ஓவியத்துக்கு நிபுணர்களின் உண்மைத்தன்மை சான்று கிடைத்தது எப்படி எனவும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close