[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

பற்றி எரியும் பிரான்ஸ்.. எங்கும் போராட்டங்கள் - என்ன நடக்கிறது?

france-to-declare-state-of-emergency-as-yellow-vest-protests-flood-paris

மஞ்சள் சட்டை போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்ஸ் நாடு கிட்டத்தட்ட எமர்ஜென்ஸி நிலையை எட்டியுள்ளது. 

பிரான்ஸ் நாட்டையே புரட்டி போட்டிருக்கிறது மஞ்சள் சட்டை போராட்டம். 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இது மிகப்பெரிய போராட்டம் எனக் கூறுகின்றனர். இந்தப் போராட்டம் இப்படி தீவிரமடையும் என ஒருபோதும் பிரான்ஸ் அரசு நினைத்திருக்காது. பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வுக்கு எதிராக கார் ஓட்டுநர்கள் ஆரம்பித்த போராட்டம் மக்களின் போராட்டமாக மாறியுள்ளது. ஒருநாள், இருநாள் அல்ல மூன்றாவது வாரத்தை தொட்டிருந்து மஞ்சள் சட்டை போராட்டம். அமைதி வழியில் நடைபெற்று வந்த போராட்டங்கள் மிக விரைவில் வன்முறையாக மாறிவிட்டது. நகரங்களையும் தாண்டி கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். 

       

தொடர்ச்சியான இந்தப் போராட்டத்தால் பிரான்ஸ் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்திக்கும் என அந்நாட்டு நிதி அமைச்சர் கூறுகிறார். போராட்டம் தொடங்கியது முதல் சில செக்டாரில் 15 முதல் 25 சதவீதம் வரை விற்பனை சரிந்துள்ளது. போராட்டம் காரணமாக பாரிஸ் நகரமே ஸ்தம்பித்துள்ளது. தலைநகரை தாண்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. முக்கிய சாலைகள், பெட்ரோல் பங்குகள் முடங்கியுள்ளது. 

             

பொதுமக்களையும் தாண்டி பெருவாரியான மாணவர்கள் இளைஞர்களும் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் ‘அதிபர் மக்ரோன் பதவி விலகுக’ என்ற முழக்கங்களை எழுப்பினார்கள். இந்தப் போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் பிரான்ஸின் பொதுத்துறை நிறுவனமான சிஜிடி, சம்பள உயர்வு  கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 14 ஆம் போராட்டத்தை அறிவித்துள்ளது. 

           

இதில் என்ன சிக்கல் என்றால், இந்தப் போராட்டங்கள் அரசியல் கட்சிகளாலோ, தொழிற்சங்க அமைப்புகளாலோ நடத்தப்படவில்லை. சமூக வலைத்தளங்கள் மூலம் சொற்பமான அளவிலே ஒருங்கிணைப்பு நடைபெறுகிறது. ஆனால், இது தன்னியல்பான போராட்டமாக உருப்பெற்று வருகிறது. இதில், மிகச் சாதாரணமான மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். கோபத்தை எப்படி காட்ட வேண்டும் என்று தெரியாததால் வன்முறைக்கு மாறுகிறார்கள். மக்ரோன் பணக்காரர்களின் அதிபராக உள்ளார் என்றும் தங்களது பிரச்னைகளை குறித்து அவர் கவலை கொள்வதில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். 

           

ஆனால், வன்முறைப் போராட்டங்களை ஒருபோது ஏற்றுக் கொள்ள முடியாது என்று அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார். சில மூர்க்கமான கொள்ளையர்கள் செய்வது போன்ற போராட்டங்களுக்கு அடிபணிய முடியாது எனவும் அவர் உறுதியாய் இருக்கிறார். தனது மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர நிலை பிரகடனம் செய்வது குறித்து அவர் நேற்று ஆலோசனை நடத்தினார். 

பிரான்ஸ் நாட்டில் இதற்கு முன்பாக 1968 ஆம் ஆண்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. 1968, மே மாதம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டமாக அது நடைபெற்றது. பிரான்ஸில் மிகப்பெரிய மாற்றத்தை அந்தப் போராட்டம் ஏற்படுத்தியதாக கூறுவார்கள்.  

             

போராட்டங்களின் முடிவில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க அப்பொழுது இருந்த அரசு இணங்கியது. ஆனால், தற்போதைய அதிபர் மக்ரோன் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். முந்தைய அதிபர் ஹலண்டேவின் கொள்கைகளையே மக்ரோனும் கடைப்பிடிக்கிறார் என்பதே போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. 

இதனை படிக்க ...பிரான்ஸை ஸ்தம்பிக்க வைத்த ‘மஞ்சள் சட்டை போராட்டம்’ - எமெர்ஜென்ஸி அறிவிக்க திட்டம்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close