[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

இன்று முதல் நோபல் பரிசு அறிவிப்பு

today-s-nobel-prize-announcement

உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்படவுள்ளது.

1901 ஆம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969 ஆம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 1ஆம் தேதியும் இயற்பியல் துறைக்கான விருதை 2 ஆம் தேதியும், வேதியியலுக்கு 3 ஆம் தேதியும், அமைதிக்கான நோபல் பரிசை 5 ஆம் தேதியும், அக்டோபர் 8 ஆம் தேதியன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளது. நோபல் பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கப் பதக்கமும், இரு பட்டயங்களும் வழங்கப்படும். இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை தற்போது அறிவிக்கப் போவதில்லை என்றும், அடுத்த வருட விருதின் போது சேர்த்து வழங்கப்படும் என்றும் நோபல் குழு தெரிவித்துள்ளது

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close