[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியத்தை பெறப்போவதில்லை- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: பாம்பன் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது- வைகோ
  • BREAKING-NEWS பேருந்து கண்டன உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஜன.24இல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
உலகம் 13 Nov, 2017 12:31 PM

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 207ஆக உயர்வு

toll-in-iran-iraq-border-earthquake-continues-to-rise-207-dead-1700-hurt

ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளது.

ஈரானில் வடக்கு எல்லைப் பகுதியில் உள்ளது ஹலப்ஜா நகரத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹலப்ஜா நகரம், ஈராக் எல்லையில் இருந்து 32 கி.மீ தொலையில் அமைந்துள்ளது. இதனால் ஈராக்கிலும் நிலநடுக்கத்தின் பாதிப்பு உணரப்பட்டது.

   

நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த பயங்கர நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி சுமார் 207 பேர் பலியாயினர். 1700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்தப் பகுதியில் மீட்புப் படையினருடன் இணைந்து பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

     

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close