[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

மலேசியாவில் தீபாவளிப் பண்டிகை: பிரதமர் நஜீப் பங்கேற்பு

malaysia-diwali-celebration-pm-najeeb-participated

இந்தியாவைப் போலவே மலேசியாவிலும் தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பத்துமலை உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பத்துமலை முருகன் கோயிலில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் நஜீ்ப் துன் ரசாக், அமைச்சர் டத்தோ சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மலேசியாவில் தீபாவளிப் பண்டிகை தேசியத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் இன்று தீபத்திருநாளை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்தியர்கள் அதிகம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் ஒன்றான மலேசியாவிலும் தீபாவளிக் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.

காலையில் எழுந்து குடும்பத்தோடு வீடுகளில் பூஜைகளை முடித்துக் கொண்டு, ஒன்றாக அமர்ந்து உணவு அருந்திய இந்துக்கள் அதன் பிறகு கடவுள் தரிசனத்திற்காக ஆலயங்களுக்கு வந்தனர். மலேசியாவைப் பொறுத்தவரை தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியர்கள் மட்டும் கொண்டாடும் பண்டிகை அல்ல. மூவின மக்கள் வாழும் நாடு எனும் சிறப்பு அம்சத்தை கொண்டுள்ள மலேசியாவைப் பொறுத்தவரை இது ஒரு தேசியக் கொண்டாட்டமாகும். இதற்கு வலுசேர்க்கும் வகையில் அமைகின்றது திறந்த இல்ல உபசரிப்பு.

ஆண்டு தோறும் நடைபெறும் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு இவ்வருடமும் மிகச்சிறப்பாக பத்துமலை திருத்தலத்தில் நடைப்பெற்றது. இந்த உபசரிப்பில் மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக், சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ சுப்ரமணியம் , இதர தேசியத்தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள், வெளிநாட்டினர் என திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒரு நாடு சுபிட்சமாக இருப்பதை உறுதி செய்வது அந்நாட்டு மக்கள் தங்களின் சமய நம்பிக்கைகளையும் பண்டிகைகளையும் சுதந்திரமாக பின்பற்றுவதே. அந்த வகையில் மலேசிய இந்தியர்கள் பல இனம் கொண்ட நாட்டில் நல்லிணக்கத்தோடும் குதூகலத்தோடும் வாழ்கின்றனர் என்பதை இன்றைய இந்த தீபாவளி கொண்டாட்டமும் திறந்த இல்ல உபசரிப்பும் எடுத்துகாட்டின.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close