[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு சேர்ப்பு
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS 20 ஆம். ஆத்மி எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை
உலகம் 26 Aug, 2017 10:18 AM

ட்ரம்ப் மீது அதிருப்தி - ஆலோசகர் செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா

controversial-trump-adviser-sebastian-gorka-out-of-white-house-job

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வெள்ளை மாளிகையின் ஆலோசகரான செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆட்சி மீது அந்நாட்டு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்வது வழக்கமாகி வருகிறது. அமெரிக்காவின் தகவல் தொடர்பு துறையின் இயக்குநராக இருந்த மைக் டுப்க், அதிபர் டிரம்ப் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடந்த மே மாதத்தில் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு அதிகாரியாக இருந்த சீன் ஸ்பைசர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையின் ஆலோசகராக, கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட செபாஸ்டியன் கோர்கா நேற்று ராஜினாமா செய்தார். அவர், கடந்த ஏப்ரல் மாதமே ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். அப்போது அதிபர் டிரம்ப் மற்றும் தலைமை உத்தியியலாளர் ஸ்டீவ் பேனான் ஆகியோர் கேட்டுக்கொண்டதை அடுத்து ராஜினாமா செய்யாமல் பணியை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் ஸ்டீவ் பேனான் ராஜினாமா செய்த நிலையில், ஒருவாரத்திற்குள் செபாஸ்டியன் கோர்காவும் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close