[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

பெல்ஜியத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம்: ஐரோப்பா முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

brussels-attacks-34-die-in-2-explosions-at-brussels-airport-and-metro-railway-station

பெல்ஜியம் தலைநகரில் நடந்த தாக்குதலையடுத்து ஐரோப்பா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்‌பட்டுள்ளது. லண்டன், பாரிஸ், பிர‌ங்பர்ட், அம்ஸ்டர்டாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு கூடுதலாக்கப்பட்டது. ‌இந்த தாக்குதலுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‌

ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய குண்டுவெடிப்பில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் உள்பட இருவர் காயமடைந்திருப்பதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும், குண்டுவெடிப்பில் இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும், பிரஸ்ஸல்ஸ் உள்ள இந்தியாவுக்கான தூதருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close