[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமெரிக்காவின் வால்மார்ட் உள்பட இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS ரஜினியின் அரசியல் பிரவேசம் காலம் கடந்தது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

சுதந்திரமாக இயங்கும் பயங்கரவாத அமைப்புகள்

many-terror-organizations-banned-in-pakistan-thrive-online

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட பயங்கரவாத அமைப்புகள் சமூகவலைதளங்களில் சுதந்திரமாக இயங்கி வருகின்றன. 

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹபீஸ் சையது தலைமையிலான லஷ்கர் – இ- தொய்பா உள்ளிட்ட 65 அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அவற்றில் 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் மற்றும் டெலகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் சுதந்திரமாக இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். சமூக வலைதளங்களை தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடையேயான தகவல் தொடர்புக்கு அந்த அமைப்புகள் பயன்படுத்திக் கொள்வதுடன், நிதி திரட்டவும் பயன்படுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிடும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துவரும் அரசு, தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close