[X] Close
JUST IN

விஜய் மல்லையா லண்டனில் கைது

vijay-mallya-arrested-in-london

ரூபாய் 9,000 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் பெற்ற மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை. அவற்றில் ஐ.டி.பி.ஐ. வங்கியில் பெற்ற ரூ.900 கோடி கடனும் அடங்கும். இதுதொடர்பாக, விஜய் மல்லையா மற்றும் அவரது கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. பின்னர், மற்ற வங்கிகளை அவர் ஏமாற்றியது தொடர்பாகவும் விசாரணையை விரிவுபடுத்தியது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோதே, விஜய் மல்லையா, லண்டனுக்கு சென்று விட்டார். அதன்பிறகு அவர் நாடு திரும்பவில்லை. அவரை நாடு கடத்தி, தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்திடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இந்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப லண்டனில் இருந்த விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close