[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

பேஸ்புக் சேஃப்டி செக் கிளப்பிய வெடிகுண்டு புரளி... அலறிய நெட்டிசன்கள்

facebook-safety-check-triggers-false-bomb-scare

உலக அளவில் பிரபலமான சமூகவலைதளமான பேஸ்புக், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக இருப்பதை நண்பர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் சேஃப்டி செக் எனும் வசதியை ஏற்படுத்தி வைத்துள்ளது.

இதன்மூலம் பேஸ்புக் மூலம் இணைந்துள்ள தங்களது உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்துக்கு நெருக்கடியான காலங்களில் பாதுகாப்பாக இருப்பதை ஒரே நொடியில் தெரிவித்து முடியும். இந்த நல்ல நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்ட சேவை தாய்லாந்து நெட்டிசன்களை பதறடித்து விட்டது.

அந்நாட்டின் தலைநகர் பேங்காக்கில் சக்திவாய்ந்த வெடிகுண்டு செவ்வாய்க்கிழமை மாலையில் வெடித்ததாக புதிதா ஒரு சேஃப்டி செக் உருவாக்கப்பட்டது. இந்த தகவலை பல்வேறு ஊடகங்கள் மூலமாக உறுதிப்படுத்தியதாகக் கூறிய பேஸ்புக் நிறுவனம், அதுகுறித்த வேறெந்த தகவலையும் அளிக்காமல் கடந்த 2015 ஆகஸ்டில் நடந்த குண்டுவெடிப்பு குறித்த செய்திகளையும் அதனுடன் இணைத்து காட்டியது. இதனால் பதற்றமடைந்த பேங்காக் நெட்டிசன்கள் வெடிகுண்டு எந்த இடத்தில் வெடித்தது என தீவிரமாகத் தேடத் தொடங்கினர்.

ஆனால் அதுபோன்ற எந்தவொரு குண்டு வெடிப்பும் பேங்காக்கில் நிகழவில்லை என்று தாய்லாந்து அரசு விளக்கமளித்தது. இது குறித்து பிறகு விளக்கமளித்த பேஸ்புக் நிர்வாகம் பேங்காக் நகரில் சிறிய வெடிவிபத்து ஏற்பட்டதால் சேஃப்டி செக் ஆக்டிவேட் செய்யப்பட்டதாக கூறியது. அந்த வெடிவிபத்தில் யாருக்கும் காயமோ, பெரிய அளவிலான சேதமோ ஏற்படவில்லை. பேஸ்புக் நிறுவனம் சேஃப்டி செக்கால் விமர்சனத்தைச் சந்திப்பது இது முதல் முறையல்ல.பாரீஸ் மற்றும் பெய்ரூட்டில் கடந்த 2015 நவம்பரில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு போலியான சேஃப்டி செக்குகளை ஆக்டிவேட் செய்து பேஸ்புக் நிறுவனம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close