[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.

பேஸ்புக் நிறுவனர் வீட்டில் செயற்கை அறிவு ’ஜார்விஸ்’ உதவியாளன்

mark-zuckerberg-creates-virtual-aide-jarvis

ராபர்ட் டௌனி ஜூனியர் நடிப்பில் வெளியான அயர்ன் மேன் படத்தைப் போல செயற்கை அறிவு கொண்ட உதவியாளர் மென்பொருள் ஒன்றினை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் உருவாக்கியுள்ளார்.

அயர்ன் மேன் படத்தில் ராபர்ட் டௌனியை அடுத்து ரசிகர்களைக் கவர்ந்த அம்சம் அவரது வீட்டில் உதவியாக இருக்கும் செயற்கை அறிவு கொண்ட ஜார்விஸ் மென்பொருள் எனலாம். அந்த அளவுக்கு ராபர் டௌனிக்கு உதவியாக அனைத்து வேலைகளையும் ஜார்விஸ் சிறப்பாக செய்திருக்கும். அயர்ன்மேன் இயக்குனரின் இந்த கற்பனை கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுக்க நினைத்த பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜர்க்கர்பெர்க், ஜார்விஸ் போன்றதொரு மென்பொருளை உருவாக்குவதே 2016ம் ஆண்டின் தனது குறிக்கோளாக இருக்கும் என்று ஆண்டு தொடக்கத்தில் கூறியிருந்தார். வார்த்தை தவறாத ஜக்கர்பெர்க் ஜார்விஸ் என்ற பெயரிலேயே ஒரு மென்பொருள் உதவியாளரை தற்போது வடிவமைத்து அசத்தியுள்ளார்.

ஜார்விஸ் போன்றதொரு செயற்கை அறிவு கொண்ட மென்பொருளை எப்படி வடிவமைப்பது என்ற தலைப்பில் வீடியோ ஒன்றினை ஜக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீட்டிலுள்ள பொருட்களுக்கு இணைய இணைப்பினைக் கொடுத்து அதனை ஜார்விஸின் சர்வருடன் இணைத்துள்ள ஜக்கர்பெர்க், செல்போன், குரல் கட்டளைகள் மூலம் வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் இயக்கிக் காண்பித்துள்ளார். இந்த ஒரே மென்பொருளுக்காக வாய்ஸ் கமாண்ட் எனப்படும் குரல் மூலம் கட்டையிடுவது, பேஸ் ஸ்கேனிங் எனப்படும் முகம் மூலம் அடையாளம் காணும் முறை உள்ளிட்ட பல்வேறு செயற்கை அறிவு முறைகளை பேஸ்புக் நிறுவனர் பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சொல்ல முடியாது வருங்காலத்தில் நம் வீட்டிற்கும் ஜார்விஸ் வரலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close