[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

கருணா அம்மானுக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றக் காவல்

judicial-custody-to-karuna-amman-until-december-7

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மானுக்கு டிசம்பர் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா, அந்த அமைப்பிலிருந்து பிரிந்த பிறகு ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனைத்தொடர்ந்து அந்நாட்டு இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இந்நிலையில், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கருணா அம்மான் மீது புகார் எழுந்தது. மேலும் அமைச்சராக பதவி வகித்த காலத்தில், பயன்படுத்திய வாகனத்தை அரசிடம் திருப்பி அளிக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு இன்று வந்த போது, கருணா அம்மான் கைது செய்யப்பட்டார். அவருக்கு டிசம்பர் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close