[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்தி, சமஸ்கிருத திணிப்பை எந்தவகையிலும் தமிழகம் அனுமதிக்காது: பேரவையில் அமைச்சர் உறுதி

tn-never-allow-imposition-hindi-and-sanskrit-tn-minister

தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளைத் திணிக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவையில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக உ‌றுப்பினர் தங்கம் தென்னரசு இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் புதிய வரைவு கல்விக் கொள்கைக் குழுவில் கல்வியாளர்கள் யாரும் இல்லை என்றும், அதிகாரிகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விசயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென்றும் தென்னரசு வினவினார். அதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மத்திய அரசு சில வரைவுகளை மட்டுமே உள்ளீடு செய்திருப்பதாகவும், அதுபற்றி தமிழக அரசு விரைவில் தனது பதிலை அனுப்பிவைக்கும் என்றும் கூறினார். தமிழகத்தின் உரிமைகள், கல்வி, மொழி ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் தமிழத்தின் பதில் இருக்கும் என்றும் அன்பழகன் குறிப்பிட்டார். இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பை எந்த வகையிலும் தமிழகம் அனுமதிக்காது என்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

இதேகருத்தை தாமும் வலியுறுத்துவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பென்ஜமினும் கூறினார். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமி‌ழக அரசின் நிலைப்பாட்டை வரவேற்பதாகவும், இதனை தனித் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வ‌லியுறுத்தினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close