[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

லஞ்சப் புகாரில் பணியிடை நீக்கம் - மன உளைச்சலில் செவிலியர் தற்கொலை..!

nurse-suicide-for-suspend-action-in-madurai

மதுரையில் லஞ்சப் புகாரில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி செவிலியர் தற்கொலை செய்துகொண்டார். 

மதுரை அடுத்த பரவையைச் சேர்ந்த தனிக்கொடி என்பவரது உறவு பெண்ணிற்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை உறவினர்களிடம் காட்டுவதற்கு உதவி செவிலியர் கார்த்திகா ரூ.1000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக தனிக்கொடி என்ற பெண் கொடுத்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை முதல்வர் சங்குமணி நடத்திய விசாரணையில் கார்த்திகா லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.

ஆற்றில் கிடந்த பெண் குழந்தையின் சடலம் : தொடரும் துயரம்..!

இதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 18ஆம் தேதி மருத்துவமனை முதல்வர், கார்த்திகாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த கார்த்திகா இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கார்த்திகா தனது பணி பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில் இவ்வாறு செய்து கொண்டாரா ? என விசாரணை நடைபெற்று வருகிறது.

தாருமாறாக டோல்கேட்டில் மோதிய மினி லாரி : கோர விபத்தால் 2 இருவர் உயிரிழப்பு

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)

அஜித் பட இயக்குநர்; ஹாரிஸ் இசை - படப்பிடிப்பை தொடங்கிய 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன்! 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close