[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

சென்னையில் காலை முதலே மழை: பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என அறிவிப்பு

heavy-rain-in-chennai-today

சென்னையின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென்தமிழகம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் இடைவெளிவிட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் பெய்கிறது.

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, மடிப்பாக்கம், மாங்காடு, வேளச்சேரி, குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இதனிடையே சென்னையில் இன்று (21-11-2019) வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு காஞ்சிபுரம், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு‌மையம் தெரிவித்துள்ளது. மேலும் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : சென்னைமழைகனமழைChennaiRainHeavy rain
Advertisement:
Advertisement:
[X] Close