கிருஷ்ணகிரி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தரக்கோரி மத்தூர் காவல் நிலையம் முன்பு ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போச்சம்பள்ளி அடுத்த வேலாவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது கூட்டு குடும்பத்தில் 20ற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவருக்கு சொந்தமான சுமார் 3 சென்ட் இடத்தை இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் அருணாச்சலம், கேசவன் ஆகியோர் ஆக்கிரமித்து விட்டதாக மத்தூர் காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்திருந்தார். இது சம்மந்தமாக வழக்கும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று திடீரென எதிர்தரப்பினர் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டிடம் எழுப்ப முயற்சிப்பதாக மத்தூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பழனிவேலிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி இன்று காலை காவல் நிலையம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயசித்தார். 2 பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் கையில் வைத்திருந்த மண்ணென்னை கேனில் இருந்த மண்ணெண்ணையை அனைவரது தலையில் ஊற்றி தீ வைக்க முயற்சித்தனர்.
அதற்குள்ளாக அங்கிருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர். மத்தூர் காவல் நிலையம் முன்பு குடும்பத்துடன் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை முடங்கியதாக புகார்
“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்
இஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்!
திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..?:சென்னை உயர்நீதிமன்றம்
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
இஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்!
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்