[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

10 நிமிடங்கள் தாமதமாக வந்த ஓட்டுநர்.. நடவடிக்கை எடுத்ததால் தற்கொலை முயற்சி..!

tamilnadu-bus-corporation-driver-has-attempts-suicide

சென்னையில் பணிக்கு பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக பணி வழங்கவில்லை எனக்கூறி அரசு போக்குவரத்து ஊழியர் தற்கொலைக்கு முயன்றார். தாம்பரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஹரிமுத்து என்பவர் ஓட்டுநராக உள்ளார். இவர் பணிக்கு பத்து நிமிடம் தாமதமாக வந்ததாக கூறி கிளை மேலாளர் பணி வழங்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மனஉளைச்சல் அடைந்த ஹரிமுத்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றார். இதனை கண்ட சக ஊழியர்கள் அவரை தடுத்து உடலில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.

இந்நிலையில் இது குறித்து ஹரிமுத்து கூறுகையில், 10 நிமிடம் காலதாமதம் ஆனதால் என்னை பேருந்தை இயக்க வேண்டாம் என்று கிளை மேலாளர் கூறினார். எவ்வளவு கெஞ்சி பார்த்தும் கேட்கவில்லை, அதனால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close