[X] Close
JUST IN

தாயைப் பார்க்கச் சென்ற மகளை சரமாரியாக தாக்கிய கொடூர தந்தை  - சிசிடிவி காட்சி

madurai-district-local-news

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், தாயைப் பார்க்கச் சென்ற மகளை தந்தை கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் கொடிமரத் தெருவில் வசித்துவரும் கூலித் தொழிலாளியான அப்துல்சமது என்பவருக்கும், அவரது மனைவி மும்தாஜூக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதேபோல கடந்த மாதமும் அப்துல் சமது அடித்து துன்புறுத்தியதால் மும்தாஜ் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். தாயுடன் குழந்தைகளை அனுப்ப அப்துல் மறுப்பு தெரிவித்து தன்னுடனேயே வைத்துள்ளார். இந்நிலையில் மகள் அரப்புஸ்ரா பள்ளிமுடிந்து தனது தாயை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். 

இதனையறிந்த அப்துல், தாயை பார்க்கச்சென்‌றதற்காக மகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் தாய் இருக்குமிடத்தை கேட்டு மகளை கடுமையாக தாக்கியநிலையில், வலி தாங்காமல் சிறுமி வெளியே ஓடிவந்தார். சிறுமியை துரத்தி வந்த தந்தை, அடித்து கீழே தள்ளி கழுத்தில் மிதித்தும் டியூப் லைட்டாலும் தாக்கியது அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. 

இதனை தட்டிக்கேட்டவர்களையும் அப்துல் தாக்க முயன்றார். ஆனால், சிறுமி வலியில் அழுது துடித்ததை கண்ட அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அப்துல்லை தாக்கியதையடுத்து, அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அளித்‌த புகாரின் பேரில் சிசிடிவி ஆதாரத்தை வைத்து விசாரணை நடத்திய திருமங்கலம் நகர் காவல்துறையினர், சிறுமியை மீட்டு சிகிச்சைகாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அப்துல் சமதுவை தேடி வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close