சென்னையில் காற்று மாசு இன்று இயல்பைவிட அதிகரித்துள்ளதாக அமெரிக்க துணை தூதரகம் ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் இருந்து காற்று மாசு, கிழக்கு கடற்கரை வழியாக சென்னைக்கு அதிகமாக பரவும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். இதற்கு வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் பாலச்சந்திரன், “டெல்லி தமிழ்நாட்டிலிருந்து மிக தூரத்தில் இருக்கிறது, இரு நகரங்கள் இருக்கும் அட்சரேகையும் வெவ்வேறாக இருக்கிறது. மேலும், தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையில் மலைப்பகுதிகள் உள்ள நிலையில், தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கிலிருந்து தமிழ்நாட்டிற்கு காற்று வீசுவதால் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தமிழ்நாட்டை பாதிக்காது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் இயல்பான அளவைவிட காற்று மாசு இன்று அதிகரித்துள்ளதாக அமெரிக்க துணை தூதரகம் சார்பில் அளவிடப்பட்ட காற்று மாசு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் படி பிஎம் 2.5 (PM2.5) என்ற மாசு, இயல்பை விட இரு மடங்கு அதிகரித்து உள்ளது. அதாவது காற்று மாசு குறியீடு 182 என்ற நிலையில் இருக்கிறது. இயல்பாக இந்த மாசு அளவு காற்றில் 50-க்கும் குறைவான அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
பொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
“தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது” - நடிகை நயன்தாரா
இது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி?